/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
/
பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : ஜன 25, 2025 04:55 AM
சிவகாசி : சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் கல்லுாரி நிர்வாகம் மத்திய அரசின் தேசியத் தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
பி.எஸ்.ஆர்., கல்வி குழுமம் தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். டீன் மாரிசாமி வாழ்த்தினார்.
மத்திய அரசின் தேசியத் தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த ரேணுகாதேவி, மல்லிகா பயிற்சி அளித்தனர்.
பயிற்சியில் 60க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம், பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியன், வினோத், கிருஷ்ணவேணி, நந்தினி செய்தனர்.