/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இசேவை மையங்கள் அதிகரித்தும் தொடருது மந்தம்: மெதுவாக செயல்படும் சர்வரால் திணறல்
/
இசேவை மையங்கள் அதிகரித்தும் தொடருது மந்தம்: மெதுவாக செயல்படும் சர்வரால் திணறல்
இசேவை மையங்கள் அதிகரித்தும் தொடருது மந்தம்: மெதுவாக செயல்படும் சர்வரால் திணறல்
இசேவை மையங்கள் அதிகரித்தும் தொடருது மந்தம்: மெதுவாக செயல்படும் சர்வரால் திணறல்
ADDED : பிப் 09, 2024 04:00 AM
காரியாபட்டி: மாவட்டத்தில் இ சேவை மையங்கள் அதிகரித்து வரும் சூழலுக்கு ஏற்ப சர்வர்களின் செயல்படும் வேகத்தை அதிகரிக்காததால் சரிவர சான்றிதழ் பெற முடியாமல் பயனாளிகள் தவித்து வருகின்றனர்.
அனைத்து வகையான முக்கிய ஆவணங்கள் ஆன்லைன் வாயிலாக பெறக்கூடிய வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. பயனாளிகள் அலையாமல் ஆன்லைனில் பதிவு செய்து சான்றிதழ்கள் பெற முடியும். துவக்கத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே இ சேவை மையம் செயல்பட்டு வந்தது. தற்போது ஒவ்வொரு பகுதிக்கும் அதிக எண்ணிக்கையிலான இ சேவை மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் 1200க்கும் மேற்பட்ட மையங்கள் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு உள்ளன. ஆரம்பத்தில் சர்வரின் செயல்படும் வேகம் என்ன இருந்ததோ அதே அளவில்தான் இருப்பதாக இ சேவை மையம் நடத்துபவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
காரியாபட்டி பகுதியில் 3 நாட்களாக சான்றிதழ்கள் பெறுவது கடினமாக இருந்து வருகிறது. காலை 8:00 மணிக்குள் ஒரு சில சான்றிதழ்கள் பெற முடிகிறது. அதற்குப் பின் இரவு செயல்பாட்டுக்கு வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கின்றனர். ஒரு சிலருக்கு மட்டுமே சான்றிதழ்கள் கிடைக்கிறது. மற்றவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. உரிய நேரத்திற்கு பெற முடியாமல் தவியாய் தவித்து வருகின்றனர். மாநில முழுவதும் இப்பிரச்னை இருப்பது தெரிந்தும், அரசு அதற்கான முயற்சிகள் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
தற்போது பொது தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் பல்வேறு சான்றிதழ்கள் வேண்டி விண்ணப்பிக்கின்றனர். உரிய நேரத்தில் கொடுக்க முடியாதோ என்கிற அச்சத்தில் உள்ளனர். இ சேவை மையங்கள் அதிகரித்து வரும் சூழலுக்கு ஏற்ப, சர்வரின் கொண்டிருக்கும் திறனை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுத்து, எளிதில் சான்றிதழ்கள் பெறும் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பயனாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது: விரைவில் 2.0 என்ற திட்டம் தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் சர்வர் வேகங்கள் அதிகரிக்கப்படும். ஓட்டுனர் உரிமம் பெறுவது உள்ளிட்ட இதர சேவைகளையும் இசேவை மையங்கள் வழங்கும், என்றார்.

