UPDATED : நவ 04, 2026 11:48 AM
ADDED : நவ 04, 2026 11:45 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து நேற்று மாலை 6:00 மணிக்கு பஸ் ஸ்டாண்ட், சின்னக்கடை வீதி, காமராஜர் சிலை ரோடு, பெரிய மாரியம்மன் கோவில், பைபாஸ் ரோடு உட்பட பல்வேறு வீதிகளில் நடை ரோந்தில் ஈடுபட்டார். ரோட்டோர வியாபாரிகள், மக்களிடம் குறைகளை கேட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர் அவர் கூறியதாவது: தீபாவளி நேரத்தில் மக்கள் பாதுகாப்பிற்கு போலீஸ் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளோம். சிவில் உடையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நவ. 7, 8, 9 தேதிகளில் விடுமுறை விடப்பட்டுள்ளதால் வெளியூர் செல்பவர்கள், மூத்த குடிமக்கள், புறநகர் பகுதிகளில் கண்காணிப்பை அதிகப்படுத்தி உள்ளோம். பஸ், ரயில் வாகனங்களில் பட்டாசு கொண்டு செல்வதை தடுக்க ரயில்வே ஸ்டேஷன்களிலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது, என்றார்.
நடைரோந்தில் டி.எஸ்.பி. பாலச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள், போலீசார் உடன் வந்தனர்.
