/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
லட்சக்கணக்கில் செலவு செய்தும் வீண்
/
லட்சக்கணக்கில் செலவு செய்தும் வீண்
ADDED : ஜன 21, 2025 05:27 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் சேதமான ரோட்டை சரி செய்ய ரோடு,  வாறுகால் அமைக்க ரூ.லட்சக்கணக்கில் செலவளித்து பணி நடந்தும் மீண்டும் மீண்டும் ரோடு சேதமாகி வருகிறது.
அருப்புக்கோட்டை நாடார் மயான ரோடு அருகில் உள்ள ஜோதிபுரம் பகுதியில் உள்ள ரோட்டை பயன்படுத்தி மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் செல்வதற்கும், நகரில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு  செல்வர். அருப்புக்கோட்டை சுற்றியுள்ள தொட்டியாங்குளம், இலங்கிபட்டி, புலியூரான் உள்ளிட்ட கிராம மக்களும் இந்த ரோட்டை பயன்படுத்துவர். முக்கியமான இந்த ரோடு ஜோதிபுரம் பகுதியில் மட்டும் கிடங்காக கழிவுநீர் தேங்கி உள்ளது. இதில் டூ வீலர்களில் செல்பவர்கள் தடுமாறி விழுகின்றனர். மினி சரக்கு வாகனங்களின் டயர்கள் கிடங்கில் சிக்கி கொள்கிறது.
நகராட்சி இந்த ரோட்டில் ஒவ்வொரு முறையும் லட்சக்கணக்கில் நிதியை செலவளித்து கடமைக்கு பணி செய்வதால், ரோடு மீண்டும், மீண்டும் சேதமாகி விடுகிறது. ரோட்டின் ஓரத்தில் உள்ள வாறுகாலை பல லட்சம் ரூபாய்  செலவளித்து கட்டியுள்ளனர். சீராக இல்லாததால்  கழிவுநீர் மீண்டும் ரோட்டில் தேங்கி கிடங்காக மாறி விடுகிறது. பள்ளத்தில் மண் அடிப்பதும், தார் போடுவதுமான பணிகள்  நடப்பது மட்டும் வாடிக்கையாக உள்ளது. இதற்கான நிரந்தர தீர்வை நகராட்சி எடுப்பதில்லை.

