நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார், : கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலையில் 41 வது விளையாட்டு விழா நடந்தது.
வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். மாணவர் நல இயக்குனர் சாம்சன் நேசராஜ் வரவேற்றார். துணைத் தலைவர் சசிஆனந்த், கிருஷ்ணன் கோயில் எஸ்.ஐ. ரமேஷ் குமார் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து பேசினார். மாணவி மகாலட்சுமி ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். துறை தலைவர் சிதம்பரம் விளையாட்டு சாதனைகள் குறித்து பேசினார்.
பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. உடற்பயிற்சி இயக்குனர் விஜயலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை விளையாட்டு துறை ஆசிரியர்கள் செல்வகுமார், உதயகுமார், அலுவலர்கள் செய்திருந்தனர்.

