/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., பஸ் ஸ்டாண்ட் கடைகளை நவ.15க்குள் காலி செய்ய கெடு
/
ஸ்ரீவி., பஸ் ஸ்டாண்ட் கடைகளை நவ.15க்குள் காலி செய்ய கெடு
ஸ்ரீவி., பஸ் ஸ்டாண்ட் கடைகளை நவ.15க்குள் காலி செய்ய கெடு
ஸ்ரீவி., பஸ் ஸ்டாண்ட் கடைகளை நவ.15க்குள் காலி செய்ய கெடு
ADDED : அக் 17, 2024 04:59 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டில் கிழக்கு பகுதியில் உள்ள கடைகளை இடித்து விட்டு 29 புதிய கடைகள் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 15க்குள் கடைகளை காலி செய்ய நகராட்சி நிர்வாகம் வியாபாரிகளுக்கு கெடு விதித்துஉள்ளது. ஆனால், ஜன. 15 வரை அவகாசம் கொடுக்கும்படி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதுள்ள பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள் கட்டி 60 ஆண்டுகள் கடந்த நிலையில், கடைகளில் கூரை சேதமடைந்து நாளுக்கு நாள் பழுதடைந்து வருகிறது. இதனால் முழு அளவில் கடைகளை இடித்து கட்ட நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இதற்கு 15 கோடி ரூபாய் வரை நிதி தேவைப்படும் நிலையில் தற்போது ரூ. 3.25 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் பஸ் ஸ்டாண்டில் கிழக்கு பகுதியில் உள்ள கடைகளை மட்டும்இடித்து விட்டு, 29 கடைகள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டுள்ளது. ஓராண்டு காலத்திற்குள் பணிகள் முடிக்கவும் திட்டமிட்டுள்ளது.
நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் வைத்து இடிக்கப்பட உள்ள கடைகளின் உரிமையாளர்களை அழைத்து, நகராட்சி தலைவர் ரவி கண்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நவ., 15க்குள் கடைகளை காலி செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், தங்களுக்கு ஜன.15 வரை மூன்று மாத கால அவகாசம் தரும்படி கடை உரிமையாளர்கள் கேட்டனர். இதற்கு நகராட்சி நிர்வாகம் உடன்படவில்லை.