/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., திருவண்ணாமலைக்கு அதிக பஸ்கள் இயக்க எதிர்பார்ப்பு
/
ஸ்ரீவி., திருவண்ணாமலைக்கு அதிக பஸ்கள் இயக்க எதிர்பார்ப்பு
ஸ்ரீவி., திருவண்ணாமலைக்கு அதிக பஸ்கள் இயக்க எதிர்பார்ப்பு
ஸ்ரீவி., திருவண்ணாமலைக்கு அதிக பஸ்கள் இயக்க எதிர்பார்ப்பு
ADDED : ஆக 31, 2025 12:27 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து திருவண்ணாமலைக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை பஸ்கள் இயக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவண்ணாமலையில் இருந்து குலாலர் தெரு, கோட்டை தலைவாசல் தெரு, ஆத்துக்கடை தெரு பகுதிகளில் பல ஆயிரம் வீடுகள் உள்ளது. இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஸ்ரீவில்லிபுத்துார் நகர் பகுதிக்கு வந்து செல்ல தற்போது காலை மற்றும் மாலை மட்டுமே டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் மினி பஸ்களில் ரூ.10 கொடுத்து தான் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான கல்லூரி மாணவிகள் சிவகாசி, ராஜபாளையம், கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று வரும் நிலையில் நேரடி பஸ் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்லவும், சிவகாசி, வத்திராயிருப்பு, ராஜபாளையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடியாக கட்ட பஸ்கள் இயக்கவும் அரசு போக்குவரத்து கழக நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

