/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., அரசு கல்லுாரிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரி மறியல்
/
ஸ்ரீவி., அரசு கல்லுாரிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரி மறியல்
ஸ்ரீவி., அரசு கல்லுாரிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரி மறியல்
ஸ்ரீவி., அரசு கல்லுாரிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரி மறியல்
ADDED : மார் 16, 2024 12:14 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து அரசு கல்லூரிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டுமென கல்லூரி மாணவர்கள் நேற்று காலை பஸ் மறியலில் ஈடுபட்டனர்.
900 மாணவர்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எம்.எஸ். பள்ளியில் செயல்பட்ட அரசு கல்லூரி 10 நாட்களுக்கு முன்பு பிள்ளையார் குளத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் திறக்கப்பட்டு இடமாற்றம் செய்து செயல்பட துவங்கியது.
ஆனால், மாணவர்கள் சென்று வர கல்லூரிக்கு போதிய பஸ் வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால் காலையில் 8:20 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து புறப்படும் தனியார் பஸ்ஸில் படியில் தொங்கிக்கொண்டு மாணவர்கள் பயணித்தனர்.
இந்நிலையில் காலை 8:20 மணி 8:50 மணிக்கு 2 டவுண் பஸ்கள் இயக்கப்பட்டது.
அதுவும் போதுமானதாக இல்லை. மேலும் மாலை 4:00 மணிக்கு கல்லூரி முடிந்து வீடு திரும்ப ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நேரடி பஸ் இல்லாததால் மாணவர்கள் ராஜபாளையம் சென்று பயணித்து வந்தனர்.
இதனால் கூடுதல் பண விரயம், நேர விரயத்திற்கு மாணவர்கள் ஆளாகினர்.
இந்நிலையில் நேற்று காலை 8:20 மணிக்கு காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்சில் இயக்கக்கோரி மாணவர்கள் பஸ்ஸ்டாண்ட் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டவுன் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன், அரசு பஸ் டிப்போ மேனேஜர் மாரிமுத்து பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது. அதில் மாணவர்கள் பயணித்தனர்.
நேற்று காலை கல்லூரியில் முதல்வர் பூர்ணிமா, டிப்போ மேனேஜர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
இதனையடுத்து மாலையில் கல்லூரி முடிவடைந்த உடன் ஸ்ரீவில்லிபுத்தூர் வருவதற்கு கூடுதல் பஸ்கள் உடனடியாக இயக்க முடிவு செய்யப்பட்டது.

