/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் தபால் தலை கண்காட்சி
/
சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் தபால் தலை கண்காட்சி
சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் தபால் தலை கண்காட்சி
சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் தபால் தலை கண்காட்சி
ADDED : அக் 10, 2025 02:58 AM

சிவகாசி: சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் அஞ்சல் துறை சார்பில் மாவட்ட அளவிலான தபால் தலை கண்காட்சி வி(ரு)தை என்ற தலைப்பில் நடந்தது. முதுநிலை அஞ்சல் கோட்டம் கண்காணிப்பாளர் சுசிலா வரவேற்றார். கலெக்டர் சுகபுத்ரா, தென் மண்டல அஞ்சல் துறை இயக்குனர் ஆறுமுகம், ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் ஆனந்த், முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், காளீஸ்வரி கல்லுாரி செயலாளர் செல்வராஜன் துவக்கி வைத்தனர்.
விழாவில் அஞ்சல் தலைகள் சேகரிப்புகள், காட்சிப்படுத்தப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்துார் சாம்பல் நிற அணில் வன உயிரின சரணாலயத்திற்கும், புவிசார் குறியீடு பெற்ற விருதுநகர் சம்பா வத்தலுக்கு சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியிடப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு கருத்தரங்குகள், பயிற்சி பட்டறை, வினாடி வினா நடத்தப்பட்டது. ஆதார் திருத்த சேவைகளுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. கணக்கு துவங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. மேலும் மாதிரி தபால் நிலையம் அமைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் இருந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.