
ராஜபாளையம்: ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாநில செஸ் ஓபன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகிறது.
சிவகாசி செஸ் கிளப் சார்பில் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்தில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடம் பெற்றவர்கள், ஆர்வம் உள்ளவர்கள் என 216 பேர் பங்கேற்று உள்ளனர்.
தினமும் காலை, மாலை என 2 ரவுண்டுகளாக போட்டிகள் நடைபெற்று ரவுண்ட் ராபின் அடிப்படையில் புள்ளி பட்டியலில் அதிகம் பெற்றவர்கள் அடுத்த கட்ட போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
இறுதிப் போட்டி வியாழன் நடக்கிறது. வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு ரூ.2 லட்சம், சாம்பியன்ஷிப் பட்டம் வழங்கப்படுவதுடன் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடம் பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுவர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்பாடுகளை சர்வதேச நடுவர் அனந்தராம், துணைத் தலைமை நடுவர் ஆறுமுகம் தலைமையில் சங்கத்தினர் செய்திருந்தனர்.