நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்,: ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர் பாலிடெக்னிக்கில் 50 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
1975ம் ஆண்டு படித்த 65 மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினருடன் சந்தித்தனர். பாலிடெக்னிக்கில் படித்த போது ஏற்பட்ட இனிமையான நினைவுகள், வாழ்வில் சந்தித்த இன்னல்கள், சவால்கள் பகிர்ந்து கொண்டனர்.
சந்திப்பு நிகழ்ச்சிக்கு பி.ஏ.சி.எம் பள்ளி தாளாளர் ஸ்ரீகண்டன் ராஜா தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சந்திரசேகர் ராஜா, முதல்வர் கார்த்திகேயன், ராம்கோ கல்வி அதிகாரி கிரிதரன், துறை தலைவர்கள் மாணவர்கள் வாழ்த்தினர். முன்னாள் ஆசிரியர்களை கவுரவித்து நினைவுகளை பகிர்ந்தனர். ஏற்பாடுகளை கந்தசாமி, பெரியசாமி தலைமையில் முன்னாள் மாணவர்கள் செய்தனர்.