அருப்புக்கோட்டை : குழு விளையாட்டுப் போட்டிகளில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதில் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, டேபிள் டென்னிஸ் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் முதல் இடமும், டெனிகாய்ட், ஒற்றையர், இரட்டையர் பிரிவில் 2 ம் இடமும், 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கியில் முதலிடம், கைப்பந்து, கபாடி, வாலிபால்,டேபிள் டென்னிஸ் 2ம் இடம், 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, வாலிபால் போட்டிகளில் முதலிடம், டெனிகாய்ட் 2 ம் இடம் பெற்று குழு விளையாட்டு போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை வென்றனர். மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.
மாணவர்களை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர், பள்ளிச் செயலர் காசிமுருகன், தலைவர் ஜெயகணேஷ், பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன், நிர்வாகிகள் பாராட்டினர்.- -