நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் பெத்தனாட்சி நகரில் உள்ள அன்னை லிட்டில் பீட் பிளே பள்ளியில் மாணவர்கள் அரை மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைப்பதற்கான நிகழ்ச்சி தாளாளர் செல்வி தலைமையில் நடந்தது.
இதில் 6 வயது வரை உள்ள 60 மாணவர்கள் பங்கேற்று சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
கிரகாம்பெல் புத்தகத்தின் முதன்மை ஆசிரியர் ஸ்ரீதர், மாரி செல்வம் ஆகியோர் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்தனர். அதன் பின் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.