நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் சென்னையில் நடந்தது.
இதில் 14 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் பங்கேற்ற விருதுநகர் சவுடாம்பிகை மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் விஷ்ணுப்பிரியா, ஹரிப்பிரியா, கார்த்திகா, பிருந்தா காரத் வெள்ளிப்பதக்கங்களை வென்றனர்.
அதே போல தர்மபுரியில் நடந்த 19 வயதுக்குட்பட்ட குத்துச்சண்டையில் 60 முதல் 64 கிலோ எடை பிரிவில் மாணவர் ஜெகதீபன் தங்கப்பதக்கம் வென்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை அல்லம்பட்டி தேவாங்கர் மகாஜன சபைத் தலைவர் ராஜேந்திரன், அம்பலக்காரர் வீரராஜன், துணைத்தலைவர் அண்ணாமலை, செயலாளர் வீரபாண்டி உள்பட பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.