/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உண்மையும் விடாமுயற்சியும் இருந்தால் மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறலாம்
/
உண்மையும் விடாமுயற்சியும் இருந்தால் மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறலாம்
உண்மையும் விடாமுயற்சியும் இருந்தால் மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறலாம்
உண்மையும் விடாமுயற்சியும் இருந்தால் மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறலாம்
ADDED : ஜூலை 19, 2025 11:31 PM

சிவகாசி: உண்மையும் விடாமுயற்சியும் இருந்தால் மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறலாம், என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ராமகிருஷ்ணன் பேசினார்.
சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் 21வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி செயலர் செல்வராஜன் துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் பாலமுருகன் வரவேற்றார்.
சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி ராமகிருஷ்ணன் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது:
பட்டம் பெறும் மாணவர்கள் நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும். சத்தியம், அகிம்சை, எளிமை, நேர்மை, அர்ப்பணிப்பு ஆகிய பண்புகளைப் பின்பற்றி நாட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
மாணவர்கள் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்வதன் மூலம் உலகத்தையே முன்னேற்ற இயலும். உண்மையும் விடாமுயற்சியும் இருந்தால் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேறலாம். அறிவியல் வளர்ச்சியையும் அறிவியல் சார்ந்த கருவிகளையும் மாணவர்கள் முன்னேற்றத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அலைபேசி பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
543 இளநிலை மாணவர்கள், 104 முதுநிலை மாணவர்கள், 36 முதுநிலை வணிக நிர்வாகவியல், தொழில்நுட்பவியல் துறை மாணவர்கள் பட்டம் பெற்றனர். காளீஸ்வரி மேலாண்மையியல் தொழில்நுட்பவியல் கல்லுாரி இயக்குனர் வளர்மதி கலந்து கொண்டார்.