/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு போக்குவரத்து கழகங்களில் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினருக்கு மட்டும் மாற்றுப் பணி---
/
அரசு போக்குவரத்து கழகங்களில் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினருக்கு மட்டும் மாற்றுப் பணி---
அரசு போக்குவரத்து கழகங்களில் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினருக்கு மட்டும் மாற்றுப் பணி---
அரசு போக்குவரத்து கழகங்களில் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினருக்கு மட்டும் மாற்றுப் பணி---
ADDED : அக் 08, 2024 04:23 AM
ராஜபாளையம் : அரசு போக்குவரத்து கழகங்களில் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினருக்கு மட்டும் மாற்றுப் பணி வழங்கப்படுவதால், உண்மையிலேயே உடல் நலம் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பணியில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழக அரசு போக்குவரத்து துறையின் கீழ் செயல்படும் எட்டு போக்குவரத்து கழகங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். டிரைவர், கண்டக்டர்கள் தங்களுக்கு ஏற்படும் விபத்து, முழு அளவு செயல்பட முடியாமை, உடல் நல குறைவால் பாதிக்கப்படுதல் போன்றவை காரணமாக மருத்துவ சான்றிதழ் வழங்கினால் போக்குவரத்து பணிமனைகளில் மாற்று பணி வழங்கப்படும்.
இது போன்ற மாற்றுப் பணிகளில் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினருக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து வழங்கப்படுவதால் விபத்தில் பாதிக்கப்பட்ட உண்மையான தொழிலாளர்கள் பணி இன்றி சிரமப்படுகின்றனர்.
இது குறித்து அரசு போக்குவரத்து கழக பாரதிய மஸ்துார் சங்க விருதுநகர் மாவட்ட செயலாளர் குருசாமி:
மாவட்டத்திலுள்ள ஒன்பது போக்குவரத்து பணிமனைகளில் நல்ல உடல் நிலையுடன் உள்ள ஆளும் தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர் கண்டக்டர்கள் 20 பேர் வரை மாற்றுப் பணி யில் உள்ளனர். இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவருக்கு மெடிக்கல் போர்டு சான்று வழங்கியும் மாற்றுப் பணி வழங்காமல் அலைக்கழிக்கின்றனர்.
கடந்த ஆண்டு சாலை விபத்தில் ஊனமுற்ற டிரைவருக்கு மெடிக்கல் போர்டு ஆய்வுக்கு கூட பரிந்துரை செய்யாமல் உள்ளதுடன், பணிக்கு வரவில்லை என மெமோ வழங்குகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான நிவாரண சட்டம் 47ன் கீழ் அரசு போக்குவரத்து கழகங்களில் பணி புரியும் நுாற்றுக்கணக்கான ஊழியர்களின் நிவாரணம் கோரி மாநிலம் முழுவதும் தாக்கல் செய்த மனுக்கள் கிடப்பில் உள்ளது.
எனவே அரசு முறையாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மட்டும் மாற்றுப் பணி வழங்க வேண்டும்.