தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சூப்பர் ரிப்போர்ட்டர்

சூப்பர் ரிப்போர்ட்டர்

சூப்பர் ரிப்போர்ட்டர்


UPDATED : நவ 14, 2026 05:37 PM

ADDED : நவ 14, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 05:37 PM ADDED : நவ 14, 2026 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓராண்டாகியும் போடாத வாறுகால் பாலம்; அடைபட்டு கிடக்கும் நீர் வரத்து பாதைகள்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் உழவர் சந்தை வடபுறம் அரசு மருத்துவமனை செல்லும் ரோட்டில் இருந்த வாறுகால் பாலம் தோண்டி போட்டு ஓராண்டாகியும் இன்னும் சீரமைக்காததால் ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாத நிலை, மழை பெய்தால் பஜார் வீதி ரோடுகளில் சகதி ஏற்படும் நிலை, நீர் வரத்து பாதைகள்,வாறுகால்களில் கொட்டப்படும் திடக்கழிவுகளால் சுகாதாரக் கேடு போன்ற குறைபாடுகளை களைய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகரில் பஸ் ஸ்டாண்ட்டை சுற்றியுள்ள பஜார் வீதி வாறுகால்களில் கழிவுகள் கொட்டப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழை பெய்தால் பேவர் பிளாக் ரோடுகளில் கழிவுநீர் ஓடும் நிலை காணப்படுகிறது.

நகரின் ஒவ்வொரு தெருவிலும் உள்ள பேவர் ப்ளாக் ரோடுகளில் பரவி கிடக்கும் மண்களால் மழை நேரத்தில் சகதி ஏற்படுகிறது. ஆத்துகடை சந்திப்பிலிருந்து பெரியகுளம் கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து பாதையில் கழிவுகள் கொட்டப்பட்டு அடைபட்டு வருகிறது.

சிறிய மழை பெய்தாலே பஸ் ஸ்டாண்ட், பெரிய மாரியம்மன் கோயில், உழவர் சந்தை, கீழ ரத வீதி, வடக்கு ரத வீதி சந்திப்பு பகுதிகளில் கழிவு நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

உழவர் சந்தை வடபுறம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் ரோட்டில் ஓராண்டுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் தோண்டி போட்ட வாறுகால் பாலம் இன்னும் சீரமைக்கப்படாததால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை உள்ளது.

பஸ் ஸ்டாண்டின் நுழைவுப்பகுதியில் மழை பெய்தால் கழிவு நீர் தேங்குகிறது. பெரியகுளம், வடமலைக்குறிச்சி கண்மாய் நீர்வரத்து பாதைகளில் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.

வீடுகள் மற்றும் கடைகளின் திடக்கழிவுகள் வாறுகால்களில் கொட்டப்படுவதால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.

சுத்தப்படுத்துங்கள்



என். ஜி. ஓ. காலனி ரோட்டில் இரண்டு பள்ளிகள் உள்ள நிலையில் வாறுகாலில் கழிவுகள் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. மழை நேரத்தில் கழிவுநீர் தேங்குவதால் மாணவர்கள், அப்பகுதி குடியிருப்பாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனை சுத்தப்படுத்த வேண்டும்.

- சுப்பிரமணியன், குடியிருப்பாளர்.

* ரோட்டில் செல்லும் கழிவு நீர்

நகரில் வடக்கு, கிழக்கு, தெற்கு ரத வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது இடிக்கப்பட்ட திடக்கழிவுகள் கழிவுநீர் வாறுகால்களில் அடைபட்டு கிடப்பதால் மழைக்காலத்தில் சிறிய மழை பெய்தால் கூட கழிவுநீர் ரோட்டில் செல்கிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

- மாரியப்பன், முன்னாள் கவுன்சிலர்.

* ஆம்புலன்ஸ் செல்ல வழி இல்லை

உழவர் சந்தை வடபுறம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் அவசர வழி பாலத்தை ஓராண்டு கடந்தும் இன்னும் சீரமைக்காததால் ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை. இதே போல் ஆத்துக்கடை தெருவில் இருந்து குரங்கு பாலம் செல்லும் நீர் வரத்து பாதையில் கழிவுகள் கொட்டப்பட்டு மண்மேவி காணப்படுகிறது. இதனை தூர்வார வேண்டும்

- ஈஸ்வரன், குடியிருப்பாளர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us