தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தாறுமாறாக நிறுத்தப்படும் டூவீலர்களால் பஸ்களை இயக்க முடியலை:டிராபிக் போலீசார் ஒழுங்குபடுத்த டிரைவர்கள் எதிர்பார்ப்பு

தாறுமாறாக நிறுத்தப்படும் டூவீலர்களால் பஸ்களை இயக்க முடியலை:டிராபிக் போலீசார் ஒழுங்குபடுத்த டிரைவர்கள் எதிர்பார்ப்பு

தாறுமாறாக நிறுத்தப்படும் டூவீலர்களால் பஸ்களை இயக்க முடியலை:டிராபிக் போலீசார் ஒழுங்குபடுத்த டிரைவர்கள் எதிர்பார்ப்பு


UPDATED : நவ 14, 2026 11:33 PM

ADDED : நவ 14, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 11:33 PM ADDED : நவ 14, 2026 05:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலை, பஜார் ரோடுகளின் இருபுறமும் டூவீலர்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் பஸ்களை இயக்க டிரைவர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனை போக்குவரத்து போலீசார் ஒழுங்குபடுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

மாவட்டத்தில் ஒவ்வொரு நகரிலும் தேசிய, மாநில நெடுஞ்சாலை வழியாக பஸ் போக்குவரத்து நடந்து வருகிறது.

ஆனால் மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி பல ஆண்டுகளான நிலையில் தற்போது நடை பாதைகள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு தார் ரோடு மட்டுமே மிச்சம் என்ற நிலை உள்ளது.

இதனால் மாவட்டத்தின் பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு பஜார் வீதிகள் வழியாக நகரை கடந்து செல்வதற்குள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக பல கடைகள் தங்களின் உட்பகுதியை காலியாக போட்டுவிட்டு நடைபாதையை ஆக்கிரமித்து உள்ளதால் டூவீலர்கள் தார் ரோட்டில் தான் நிறுத்தப்படுகிறது. இதனால் எதிரும், புதிருமாக இரு பஸ்கள் எளிதில் வர முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தளவாய்புரத்தில் இருந்து செட்டியார்பட்டி, முகவூர் வரையிலும், ராஜபாளையத்தில் சொக்கர் கோவிலில் இருந்து பஞ்சு மார்க்கெட் வரையிலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பஸ் ஸ்டாண்ட், ஆத்துக்கடை, சின்ன கடை, ராமகிருஷ்ணாபுரம், அரசு பஸ் டிப்போ வரையிலும், சர்ச் சந்திப்பில் இருந்து கைகாட்டி கோயில் வரையிலும்,

வத்திராயிருப்பில் முத்தாலம்மன் பஜாரில் இருந்து அரசு மருத்துவமனை வரையிலும்,

கூமாபட்டியில் பஸ் ஸ்டாண்டிலிருந்து பேரூராட்சி அலுவலகம் வரையிலும்

சிவகாசியில் பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள அனைத்து ரோடுகளிலும், சாத்தூர் ஏழாயிரம் பண்ணை, வெம்ப கோட்டை பகுதியிலும்,

அருப்புக்கோட்டையில் பாவடி தோப்பு முதல் பந்தல்குடி, திருச்சுழி ரோட்டிலும்,

விருதுநகரில் பழைய பஸ் ஸ்டாண்ட் சுற்றியுள்ள பகுதிகளும் பஸ்கள் எளிதில் வந்து செல்ல முடியாத வகையில் ரோட்டின் இருபுறமும் டூவீலர்கள் நிறுத்தப்படுகிறது.

மேலும் மாவட்டத்தில் ஒவ்வொரு நகரிலும் தேசிய, நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து ரோடு குறுகிக் கொண்டே வருகிறது. இதனால் மதுரை, தேனி போன்ற வெளி ஊர்களில் இருந்து வரும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்வதை தவிர்க்கும் கட்டாயத்திற்கு ஆளாகுவதாக பஸ் டிரைவர்கள் கூறுகின்றனர்.

மாவட்டத்தில் அனைத்து நகரங்களிலும் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததே இதற்கு முக்கிய காரணம். மேலும் இன்றைய தலைமுறையினர் கடைகளுக்கு முன்பு தங்களது டூவீலர்களை தாறுமாறாக, தார் ரோடு வரை நிறுத்துகின்றனர்.

இதனால் பஸ்களை பாதுகாப்பாக இயக்க மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டிய உள்ளதாக பஸ் டிரைவர்கள் கூறுகின்றனர்.

எனவே, மாவட்ட முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் பஜார் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழு அளவில் அகற்றியும், தாறுமாறாக நிறுத்தப்படும் டூவீலர்களை அப்புறப்படுத்தியும் எளிதில் பஸ்கள் வந்தும் செல்லும் நிலையை ஏற்படுத்த மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிரைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us