நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் நண்பர்கள் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்யேற்பு விழா நடந்தது. மாவட்ட ஆளுநர் தினேஷ் பாபு தலைமை வகித்தார். துணை ஆளுநர் முருகதாசன் முன்னிலை வகித்தார். புதிய தலைவராக கந்தசாமி, செயலாளராக ராஜு, பொருளாளராக கனகபெருமாள் பதவியேற்றனர். முன்னாள் தலைவர் பால்சாமி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிர்வாக செயலாளர் ஜாகிர் உசேன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
விழாவில் கலசலிங்கம் பல்கலைக்கழக துணை வேந்தர் ஸ்ரீதரன், முன்னாள் துணை ஆளுநர் வேலாயுதம், ரோட்டரி சங்க நிர்வாகிகள் சந்திரன், அங்கு ராஜ், முத்துராஜ், செந்தில் வாழ்த்தினர். கல்வி, மருத்துவம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. செயலாளர் ராஜு நன்றி கூறினார்.