/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெள்ளத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் பலி: நிவாரணம், அரசு வேலை வேண்டும்
/
வெள்ளத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் பலி: நிவாரணம், அரசு வேலை வேண்டும்
வெள்ளத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் பலி: நிவாரணம், அரசு வேலை வேண்டும்
வெள்ளத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் பலி: நிவாரணம், அரசு வேலை வேண்டும்
ADDED : டிச 05, 2024 05:04 AM
விருதுநகர் : விழுப்புரம் மாவட்டம் குண்டல புலியூரில் டாஸ்மாக் கடை விற்பனையாளர் சக்திவேல், பணி முடித்து வீடு திரும்பும் போது வெள்ளத்தில் சிக்கி பலியானார். அவரின் குடும்பத்துக்கு நிவாரணம், அரசு வேலை வழங்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன பொதுச் செயலாளர் திருச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெஞ்சல் புயல் நவ.,30 மாலை கரையை கடக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. இந்த சூழ்நிலையில் டாஸ்மாக் கடைகள் திறந்திருந்தால் பலரும் வெளியே வந்து அசாம்பாவிதம் ஏற்படும்.
இதை தவிர்க்க டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என சம்மேளனத்தின் சார்பில் நவ. 30ல் மேலாண்மை இயக்குனருக்கு வாட்ஸ் ஆப் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாகம் எந்த வழிகாட்டுதல்களையும் வெளியிடாததால் வேறுவழியின்றி ஊழியர்கள் மழை, வெள்ளத்தில் கடையை திறந்து பணிபுரிய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குண்டல புலியூரில்உள்ள டாஸ்மாக் கடை விற்பனையாளர் சக்திவேல், பணி முடித்து வீடு திரும்பும் போது வெள்ளத்தில் சிக்கி பலியானார். இவரின் உயிரிழப்புக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்.
இதில் முறையான வழிகாட்டுதல் செய்யாத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. எனவே விற்பனையாளர் சக்திவேல் குடும்பத்திற்கு உரிய நிவாரணம், அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.