தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இடவசதியின்றி தற்காலிக பஸ் ஸ்டாண்ட்

இடவசதியின்றி தற்காலிக பஸ் ஸ்டாண்ட்

இடவசதியின்றி தற்காலிக பஸ் ஸ்டாண்ட்


ADDED : ஜூன் 08, 2025 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2025 05:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நகராட்சி தற்காலிக பஸ் ஸ்டாண்ட் இடவசதியின்றி அமைந்துள்ளதால் தினமும் ஒரு விபத்து ஏற்படுகிறது.

அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் உள்ள நகராட்சி பஸ் ஸ்டாண்ட் இடித்து புதியதாக நவீன வசதிகளுடன் கடந்த 3 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் நிலையில், அதன் அருகிலேயே தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. புதிய பஸ் ஸ்டாண்ட் முழுவதும் ரோடு அமைக்கும் பணி பாதாள சாக்கடை திட்ட பணிகள் செய்ய இருப்பதால் கடந்த வாரம் இந்த தற்காலிக பஸ் ஸ்டாண்ட் மதுரை ரோடு நெசவாளர் காலனி எதிர்ப்புறம் உள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது.

இங்கு பஸ்கள் உள்ளே வந்து வெளியில் செல்ல இடவசதி குறைவாகவே உள்ளது. இந்தப் பகுதி முழுவதும் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி. நெசவாளர் காலனியிலிருந்து வரும் டூவீலர்கள், ரயில்வே மேம்பாலம் பாலத்திலிருந்து அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்வதால் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் நெரிசலில் சிக்கி தவிக்கிறது. 5 நாட்களில் மட்டும் 3 க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளது.

இந்தப் பகுதியில் போக்குவரத்து போலீசார் போதுமான அளவில் பணியில் அமர்த்தி போக்குவரத்து சரி செய்ய வேண்டும். தேவையான பேரி கார்டுகளை வைத்து வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும். தற்காலிகமாக பஸ்ஸ்டாண்டில் போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us