/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயில்வே கிராஸிங்கில் தடுமாற செய்யும் ரோடு விபத்து அபாயத்தை தவிர்க்க சீரமைப்பு அவசியம்

ADDED : மார் 07, 2024 04:58 AM

விருதுநகர்: விருதுநகர் சாத்துார் ரோட்டில் ரயில்வே கிராஸிங்கில் சேதமடைந்த ரோட்டால் வாகன ஓட்டிகள் அடிக்கடி தடுமாறுகின்றனர். பேட்ஜ் பணி செய்தும் ரோடு அதிகம் சேதம் அடைந்து விட்டது.
விருதுநகர் சாத்துார் ரோட்டில் புது பஸ் ஸ்டாண்ட் அருகே ரயில்வே கிராஸிங் உள்ளது. சாத்துார் ரோடு தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தம் என்பதால் 2 ஆண்டுகளுக்கு முன்பே புதிய ரோடு போடப்பட்டது. அப்போது சேதமடைந்திருந்த ரயில்வே கிராஸிங் பகுதியில் மட்டும் போடப்படவில்லை.
காரணம் அப்பகுதி தெற்கு ரயில்வேக்கு சொந்தமானது. இந்த சேதத்தால் வாகன ஓட்டிகள் அடிக்கடி வாரி விழுந்தனர். சிலருக்கு காயம் ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு வாரம் ரயில்வே ஊழியர்கள் பேட்ஜ் பணி செய்து தார் ரோட்டில் இருந்த பள்ளங்களில் ஜல்லி, கரம்பை போட்டு நிரப்பினர்.
தண்டவாளத்தில் குறுக்கும், நெடுக்குமாக இருந்த கற்களை நேராக்கினர். இந்நிலையில் ஒரு வாரத்திலே வாகனங்கள் அதிகளவில் சென்றதை அடுத்து ஜல்லி கற்கள் சிதறி விட்டன. தற்போது மீண்டும் அந்த ரோட்டின் பல பகுதிகள் சேதமாக உள்ளன. மண்ணும் ஆங்காங்கே பரப்பி உள்ளது.
இதனால் வேகமாக யாரேனும் டூவீலரில் வந்தால் சறுக்கி விழுந்து விபத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது. மேலும் மீண்டும் ரோடு பள்ளமாகி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
இதனால் ரயில்வே நிர்வாகம் அந்த இடத்தில் கான்கிரீட்டோ, பேவர் பிளாக் கற்களோ பரப்பி வாகன ஓட்டிகள் சிரமமம் இல்லாமல் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.