ADDED : ஜன 08, 2024 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையம் சேக்கிழார் மன்ற அறக்கட்டளை ஆண்டு விழா நடந்தது.
தலைவர் பூமிநாதன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாரியப்பன் வரவேற்றார். பொதுச் செயலாளர் கணேசன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு பேச்சாளராக தரங்கம்பாடி சரவணன் பங்கேற்று பேசினார்.
காலை முதல் நடந்த நிகழ்ச்சியில் நாடகம், நாட்டியம், இன்னிசை, பேருரை, பரிசளிப்பு, பாராட்டு நிகழ்ச்சிகள் நடந்தது. சிவபுராணம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. துணைத் தலைவர் சங்கரலிங்கம் நன்றி கூறினார்.