/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிறுமலை மாதா திருத்தல ஆண்டு பெருவிழா துவக்கம்
/
சிறுமலை மாதா திருத்தல ஆண்டு பெருவிழா துவக்கம்
ADDED : மே 17, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் சிறுமலையில் மாதா திருத்தல ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனை முன்னிட்டு அருள் ஜோசப் திருப்பலிக்கு தலைமை வகித்தார். மதுரை நொபிலி மறைப்பணி மைய இயக்குனர் பால் பிரிட்டோ கொடியேற்றி மறையுரையாற்றினார். விழாவில் திருக்கொடி பவனி, திருக்கொடியேற்றம்,திருப்பலி, பொங்கல் பகிர்வு நடந்தது.
மறைவட்ட மக்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பாதிரியார் டேனியல் ஜெய் ஜோசப், உதவி பாதிரியார்கள் அமல்ராஜ், ஆனந்தன் செய்திருந்தனர்.