/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கைக்கு ஆதரவாக நாடே உள்ளது: முத்தரசன்
/
பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கைக்கு ஆதரவாக நாடே உள்ளது: முத்தரசன்
பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கைக்கு ஆதரவாக நாடே உள்ளது: முத்தரசன்
பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கைக்கு ஆதரவாக நாடே உள்ளது: முத்தரசன்
ADDED : மே 10, 2025 02:24 AM
ராஜபாளையம்:''பயங்கரவாதிகள் மீது எடுத்து வரும் நடவடிக்கைக்கு ஜாதி, மத, இன பேதமின்றி நாடே இந்திய அரசின் பின்னால் உள்ளது'' என இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
ராஜபாளையத்தில் அவர் கூறியதாவது: பாகிஸ்தான் ராணுவத்தினர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இதனால் இந்திய அரசு, நாட்டையும் மக்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு பாகிஸ்தானால் தள்ளப்பட்டுள்ளது. இந்த மோதல் இரு நாடுகளுக்கு இடையே போராக மூளவிடக்கூடாது என்பதுதான் அனைவரின் விருப்பம். இதில் ஜாதி, மத, இன பேதமின்றி நாடே இந்திய அரசின் பின்னால் உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு சாமானிய மக்களுக்கு பெருமளவு வரிகளை உயர்த்தியும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அறிவித்தும் வருகிறது. இதுபோல் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் விலை குறைந்தாலும் வரிகளை உயர்த்தி விலை குறையாமல் வைத்துள்ளது. இதன் காரணமாக விலைவாசி அதிகரித்து வருகிறது. இன்று சென்னையில் இந்திய ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் அழைப்பு விடுத்துள்ள பேரணியில் இ.கம்யூ., பங்கேற்கும்.
தனது கோரிக்கையால் 100 நாள் வேலை திட்ட தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறியுள்ளார். அவரது முயற்சிக்கு பாராட்டுக்கள். அதேபோல் 'நீட்' விலக்கு, தேசிய கல்விக் கொள்கை கல்வி நிதி உள்ளிட்ட தமிழக பிரச்னைகளிலும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.