/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கவர்னரும், ஆளும் கட்சியும் அனுசரித்துச் செல்ல வேண்டும்
/
கவர்னரும், ஆளும் கட்சியும் அனுசரித்துச் செல்ல வேண்டும்
கவர்னரும், ஆளும் கட்சியும் அனுசரித்துச் செல்ல வேண்டும்
கவர்னரும், ஆளும் கட்சியும் அனுசரித்துச் செல்ல வேண்டும்
ADDED : ஜன 10, 2025 02:41 AM
அருப்புக்கோட்டை:கவர்னரும், ஆளும் கட்சியும் அனுசரித்துச் செல்ல வேண்டும் என, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே விஜயகாந்த் பிறந்த ஊரான ராமானுஜபுரத்தில் தே.மு.தி.க., கொடியேற்று விழாவில் பங்கேற்ற அக்கட்சி பொது செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். .
ராமானுஜபுரத்தில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கட்சிகொடி ஏற்றினார். இதில் பங்கேற்ற பிரேமலதா கூறியதாவது: விஜயகாந்த் பிறந்த இம் மண்ணில் திருமண மண்டபம் கட்ட உள்ளோம். அனைத்து மாநிலங்களிலும் கவர்னரும் ஆளும் கட்சியும் இணைந்து தான் செயல்படுகின்றனர். தமிழகத்தில் இவர்களுக்குள் உள்ள ஈகோவால் மூன்றாண்டுகளாக பிரச்னை ஓடிக்கொண்டு உள்ளது.
கவர்னரும் ஆளுங்கட்சியும் அனுசரித்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு முறையும் சட்டசபைக்கு கவர்னர் வருவதும் சிறிது நேரத்தில் வெளியேறுவதும் தொடர் கதையாக உள்ளது. நீதிமன்றத்தை அணுகினால் இதற்கு தீர்வு கிடைக்கும்.வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி போட்டியிடும். இவ்வாறு கூறினார். உடன் அவரது தம்பி சுதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

