/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மகப்பேறு மருத்துவமனையில் தங்குமிடம் பூட்டிக்கிடக்கும் அவலம் --படிகளில் துாங்கும் கொடுமை

ADDED : ஜூன் 02, 2025 12:22 AM

ராஜபாளையம்:ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ரூ.42 லட்சத்தில் கட்டப்பட்ட சிறப்பு தங்குமிடம் பூட்டி கிடப்பதால் கர்ப்பிணிகளின் உதவியாளர்கள் படிகளில் துாங்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கான அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் பிரசவத்திற்காக வரும் கர்ப்பிணிகளின் உதவியாளர், பெற்றோர் தங்குவதற்காக நகராட்சி சார்பில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் 2018ல் ரூ.42 லட்சத்தில் சிறப்பு தங்குமிடம் கட்டப்பட்டது.
இங்கே படுக்கை, மின்விசிறி, கழிப்பறை உள்ளிட்ட வசதியுடன் தன்னார்வ தொண்டு அமைப்பினர் பராமரிப்பில் இருந்தது. இதற்காக மத்திய அரசு சார்பில் நகராட்சிக்கு சிறப்பு நிதி வழங்கி குறைந்த கட்டணத்தில் உணவும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த தங்குமிடம் சில மாதங்களிலே பூட்டப்பட்டது.
இதனால் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகள் உடன் வார்டில் வேறு யாரும் தங்குவதற்கு அனுமதிக்கப்படாத நிலையில் இந்த தங்குமிடம் செயல்படாததால் அவர்களின் உதவியாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள வராண்டா படிக்கட்டுகளில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சிறப்பு தங்கும் இடத்தில் ஒரு பகுதி பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்புக்கான கர்ப்பிணிகள் உள்நோயாளிகள் பிரிவாக செயல்பட்டு வருகிறது. மற்றொரு பகுதி பூட்டப்பட்டுள்ளது. மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகளின் உடன் வந்து திறந்த வெளியில் காத்திருக்கும் உறவினர்களின் எதிர்பார்க்கின்றனர்.