/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொடரும் வருவாய்த்துறையினர் வேலைநிறுத்தம் பணிகள் கடும் பாதிப்பு; தவிப்பில் பொதுமக்கள்

ADDED : மார் 07, 2024 04:57 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 9வது நாளாக நேற்றும் வருவாய்த்துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சான்று பெறுவது, பட்டா மாறுதல் என பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பட்டதாரி அல்லாதவர்களுக்கு பணி பாதுகாப்பு அரசாணை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 27 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. இதில் அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரையிலான அனைத்து நிலை அலுவலர்களும் கலெக்டர் அலுவலகம், அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் நடக்கும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் கோதண்டராமன், மாவட்ட செயலாளர் பொன்ராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன் பேசினர். 10 தாலுகா அலுவலகங்கள், 3 ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் நிர்வாக பிரிவுகள் ஆகியவை 9 நாட்களாக காலியாக காணப்படுவதால் பட்டா மாறுதல், வருவாய் சான்றுகள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வி.ஏ.ஓ., அனுமதி, ஆர்.ஐ., அனுமதி, துணை தாசில்தார், தாசில்தார் அனுமதி என அடுத்தடுத்த நிலைகளில் சான்று பெறுவதில் அனுமதி அளிக்க வேண்டி உள்ளது. தற்போது வேலை நிறுத்தத்தால் அனைத்து பணிகளிலும் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் புலம்பி தவிக்கின்றனர்.