/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கொள்கை உள்ள கட்சி பா.ஜ., மத்திய இணை அமைச்சர் பேச்சு
/
கொள்கை உள்ள கட்சி பா.ஜ., மத்திய இணை அமைச்சர் பேச்சு
கொள்கை உள்ள கட்சி பா.ஜ., மத்திய இணை அமைச்சர் பேச்சு
கொள்கை உள்ள கட்சி பா.ஜ., மத்திய இணை அமைச்சர் பேச்சு
ADDED : செப் 23, 2024 05:11 AM
சாத்துார் : சாத்துாரில் நடந்த பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கொள்கை உள்ள கட்சி பா.ஜ., மட்டும் தான் என்று பேசினார்.
சாத்துாரில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டம் 370 நீக்குவோம் என்றோம். நீக்கியுள்ளோம். அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவோம் என்றோம். கட்டினோம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் லோக்சபாவில் நிறைவேற்றி உள்ளோம். காங்., தி.மு.க., போன்று நமது கட்சி குடும்பகட்சி அல்ல. அ.தி.மு.க.விற்கு ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான் கொள்கை. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையுள்ள கட்சி பா.ஜ., மட்டும் தான், என்றார்.
இதன் பின் பொதுமக்களை சந்தித்து அவர்கள் அலைபேசி மூலம் மிஸ்டு கால் கொடுத்து பா.ஜ.,வில் 5 பேரை உறுப்பினராக சேர்த்தார். கட்சி நிர்வாகிகள் அவருடன் இருந்தனர்.