/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தண்ணீருக்கு தவிக்கும் முத்தரையர் நகர் விலை கொடுத்து வாங்கும் பரிதாபம்

ADDED : டிச 31, 2024 04:19 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியில் உள்ள முத்தரையர் நகரில் குடிப்பதற்கும், புழக்கத்திற்கும் தண்ணீர் இன்றி மக்கள் விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த செம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முத்தரையர் நகர். ஊராட்சி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
அடிக்கடி குழாய்கள் உடைப்பு மோட்டார் பழுது ஆகியவற்றால் தண்ணீர் விநியோகம் தடை பட்டது. இரண்டு மாதங்களாக இந்தப் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை.
இதனால் இப்பகுதி மக்கள் குடிப்பதற்கும் புழக்கத்திற்கும் தண்ணீர் இன்றி குடங்களுடன் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அருகிலுள்ள செம்பட்டியில் தண்ணீர் பிடிக்க சென்றால் அப்பகுதி மக்கள் இங்கே வரக்கூடாது என கூறுகின்றனர்.
தினமும் தனியாரிடம் அதிக விலை கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்துகின்றனர். .
சூரியகுமாரி, பி.டி.ஓ.,: இந்தப் பகுதியில் தண்ணீர் பகிர்மான குழாய்களை சேதப்படுத்தி விடுகின்றனர். இதனால் தண்ணீர் வினியோகம் தடை படுகிறது. குழாய்கள் சரி செய்யப்பட்டு சீராக தண்ணீர் விநியோகம் செய்ய அலுவலர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.