/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டிரைவர், நடத்துனர் பணியிடங்களை நிரப்பாததால் சிக்கல்! அரசு பஸ்கள் நேரத்திற்கு செல்ல முடியாத நிலை
/
டிரைவர், நடத்துனர் பணியிடங்களை நிரப்பாததால் சிக்கல்! அரசு பஸ்கள் நேரத்திற்கு செல்ல முடியாத நிலை
டிரைவர், நடத்துனர் பணியிடங்களை நிரப்பாததால் சிக்கல்! அரசு பஸ்கள் நேரத்திற்கு செல்ல முடியாத நிலை
டிரைவர், நடத்துனர் பணியிடங்களை நிரப்பாததால் சிக்கல்! அரசு பஸ்கள் நேரத்திற்கு செல்ல முடியாத நிலை
ADDED : ஆக 17, 2024 12:55 AM
மாவட்டத்தில் உள்ள மொத்த அரசு பஸ்களின் எண்ணிக்கை 449. இதில் அருப்புக்கோட்டை 69, விருதுநகர் 71, சிவகாசி 65, சாத்துார் 57, காரியாப்பட்டி 19, வத்திராயிருப்பு 16, ஸ்ரீவில்லிப்புத்துார் 43, ராஜபாளையம் 1 - 48, ராஜபாளையம் 2 - 30 என வரையறுக்கப்பட்ட அரசு பஸ்களின் சேவை எண்ணிக்கை மொத்தம் 418.
மேலும் மார்ச் முதல் ஜூன் வரை புதிதாக 36 அரசு பஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 16ல்9 அரசு போக்குவரத்து பணிமனைகளுக்கும் புதிதாக 29 அரசு பஸ்கள் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் 1040 டிரைவர்கள், 960 நடத்துனர்கள் தற்போது பணிபுரிகின்றனர்.
இவர்களில் பலர் பணி நிறைவு, வயது முதிர்வு, உடல் நலபாதிப்புகளால் விருப்ப ஒய்வு பெற்று வருகின்றனர். இதனால் டிரைவர், நடத்துனர்கள்பணியிடங்கள் காலியாவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்திற்கு தேவையான 150 டிரைவர்கள், 200 நடத்துனர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
இப்படி பணி ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிரித்துள்ளதால், அவர்கள் ஓட்டிய அரசு பஸ்களை கூடுதல் பணியாக பணி முடித்த டிரைவர், நடத்துனரை வைத்து இயக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த கூடுதல் பணியில் ஈடுபடுபவர்கள் திடிரென விடுப்பு எடுத்து விட்டால் மாற்றுப்பணிக்கான ஊழியர்களை வைத்து பஸ்சை இயக்க காலதாமதம் ஏற்படுகிறது. அப்போது நகர், ஊரகப்பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் ஒரு ட்ரிப் செல்ல முடியாத நிலை உண்டாகிறது.
இதனால் அவசரமாக செல்ல அரசு பஸ்சிற்கு காத்திருக்கும் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கூடுதல் பணியில் ஈடுபடுவதால் ஊழியர்கள் பணிச்சுமைக்கு ஆளாகி உடல்நலம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை புதிய நிரந்தர பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள்எதுவும் எடுக்கப்படவில்லை என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்டத்தில்உள்ள அரசு போக்குவரத்து பணிமனைகளுக்கு தேவையான டிரைவர்கள், நடத்துனர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துஉள்ளது.