/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தீராத குடிநீர் பிரச்னைச சுகாதார குறைபாட்டால் அல்லாடும் மக்கள்
/
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தீராத குடிநீர் பிரச்னைச சுகாதார குறைபாட்டால் அல்லாடும் மக்கள்
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தீராத குடிநீர் பிரச்னைச சுகாதார குறைபாட்டால் அல்லாடும் மக்கள்
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தீராத குடிநீர் பிரச்னைச சுகாதார குறைபாட்டால் அல்லாடும் மக்கள்
ADDED : செப் 28, 2024 05:30 AM

விருதுநகர்ச விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்ந்து 3 ஆண்டுகள் ஆகியும் டாக்டர்கள் பற்றாக்குறை, சுகாதார குறைபாடு, குடிநீர் வசதி தட்டுப்பாடு, பாசி படர்ந்த சுவர்கள், மகப்பேறு மருத்துவமனை காத்திருப்பு பிரிவில் இடநெருக்கடி, தீராத நாய்கள் தொல்லை என அல்லாடுகின்றனர்.
விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வந்த நிலையில் 2021ல் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து கூடுதல் நிதி ஒதுக்கி 2022 ஜன. 12 ஆறு மாடி கட்டடத்தை திறந்தனர். புதிய கட்டடம் திறந்து இரண்டரை ஆண்டுகள் ஆன நிலையில் இதில் பல்வேறு வசதி குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன.
மக்களுக்காக ஒவ்வொரு தளங்களிலும் ஏற்படுத்தப்பட்ட மினரல் குடிநீர் பல தளங்களில் செயல்படாமலே உள்ளது. இதனால் குடிநீருக்காக மக்கள் அங்குமிங்கும் அலைகின்றனர். ஆங்காங்கே சிகிச்சை பிரிவுகளுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள காத்திருக்கும் இருக்கைகள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளன. நாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது.
அங்கேயே குட்டி போட்டு நாளுக்கு நாள் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது மருத்துவமனை ஊழியர்களுக்கு, நோயாளிகளுக்கு தீராத தொல்லையாக உள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டும்.
4வது எண் லிப்ட் வேலை செய்யவில்லை. சில தளங்களில் கழிப்பறையில் தண்ணீர் வருவது கிடையாது. ஐ.சி.யூ.,வில் ஒரு ஏ.சி., வேலை செய்யவில்லை. தமனி நரம்பு இணைப்பு செய்யும் வாஸ்குலார் அறுவை சிகிச்சை டாக்டர் இல்லாததால் மக்கள் மதுரை சென்று இணைப்பு பொருத்திய பின்பே டயாலிசிஸ் செய்ய முடிகிறது. இதனால் வாரக்கணக்கில் காத்திருக்கின்றனர்.
மாவட்டத்தின் எல்லா பகுதிகளிலும் உவர்ப்பு நீரால் சிறுநீரக கல் உள்ளிட்ட கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. ஆனால் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிறுநீரகத்துறை டாக்டர் இல்லை.
இதனால் சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற முடிவதில்லை. மூளை நரம்பியலுக்கு மாற்றுப்பணியில் டாக்டர் உள்ளார். ஸ்பெஷாலிட்டி மருந்துகள் போதிய அளவில் சப்ளை இல்லை.
இந்த கட்டடம் புதிதாக துவங்கும் போது இருந்த அளவில் தற்போது சுகாதாரம் இல்லை. அடிக்கடி சுத்தம் செய்வது குறைந்து வருகிறது. இதனால் பலர் பாதிப்பை சந்திக்கின்றனர். கடைநிலை ஊழியர்கள் சிறு சிறு விஷயங்களுக்காக மக்களிடம் லஞ்சம் வாங்குவது அதிகரித்து வருகிறது.
தனியார் ஆம்புலன்ஸ்களின் தொந்தரவு அதிகம் உள்ளது. டாக்டர்கள் நோயாளி ஒருவரை மதுரைக்கு பரிந்துரைத்தால் அரசின் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் செல்வதற்கு முன்பே தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு தகவல் சென்று விடுகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் சிரமப்படுகின்றனர்.
மழை பெய்த போது மின்தடை ஏற்பட்டு நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. அதை தற்போது சரி செய்துள்ளனர். இருப்பினும் வரும் நாட்களில் பருவமழை பெய்ய உள்ளதால் மீண்டும் அது போன்று நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
புத்தர் சிலை இருக்கும் பகுதியில் இருந்து இருபுறமும் இருக்கும் சுவர்கள் தண்ணீர் லீக்கேஜ்ஜால் பாசி படர்ந்துள்ளன. தரைத்தளங்களில் கூரை பழுப்பு நிறமாக உள்ளன.
லிப்டை இயக்க ஆபரேட்டர்கள் இல்லை. கட்டில், சேர் சேதமடைந்தால் அதை சரி செய்ய ஆட்கள் இல்லை. ஒப்பந்த ஊழியர்களை கொண்டு தான் எல்லா பணிகளையும் செய்கின்றனர். அறுவை சிகிச்சை தொடர்பான தொழில்நுட்பவியலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. மகப்பேறு மருத்துவமனையில் காத்திருக்கும் இடத்தில் நெருக்கடி உள்ளது. மக்கள் அதிகம் வருவதால் போதுமானதாக இல்லை.
கூடுதல் மருத்துவர்கள் வேண்டும்
எட்வர்ட், சமூக ஆர்வலர், விருதுநகர்: கல்லீரல், இதயம் தொடர்பான சிறப்பு நிபுணர்கள் இல்லை. உபகரணங்களும் இல்லை. ஒரு மருத்துவக்கல்லுாரிக்கு பரிந்துரை என்ற பேச்சுக்கே இடமிருக்க கூடாது. தன்னிறைவாக எல்லாவற்றையும் இங்கே செய்வது தான் மக்களுக்கு நன்மை செய்யும். அவசர சிகிச்சை வார்டில் குடிநீர்இல்லை.
மேலும் இங்கு பயிற்சி மருத்துவர், இரு செவிலியர், உதவியாளர் மட்டுமே உள்ளனர். அவசர சிகிச்சையாக வரும் ஒருவரை பார்த்து விட முடியும். கூடுதலாக இன்னொரு நபர் வந்தால் பார்க்க கூடிய நிலை இல்லை. தேவையான மருத்துவர்களை அவசர சிகிச்சைவார்டில் பணியமர்த்த வேண்டும். ஸ்ட்ரக்சர் தள்ள கூட ஆளில்லை. ஒப்பந்த ஊழியர்கள் இடையே ஜாதிய பாகுபாடு இருப்பதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. விசாக கமிட்டி உள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
எக்ஸ்ரே, ஸ்கேன் தாமதம்
வி.பாலமுருகன், இந்திய கம்யூ., விருதுநகர்: மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சை பிரிவில் சிறப்பு மருத்துவர் வேண்டும். சிறிய காயங்களுக்கு கூட மதுரைக்கு அனுப்பும் சூழல் உள்ளது. கழிப்பறைகள் சுத்தமாக இல்லை. நோயாளிகளுக்கு நல்ல குடிநீர் வழங்க வேண்டும். குழந்தைகள் மகப்பேறு பிரிவில் குழந்தைகளை பார்க்க செல்ல போனால் பணம் கேட்கின்றனர்.
இதை தவிர்க்க வேண்டும். சிறுநீரக டாக்டர் இல்லை. இதனால் பாதிப்பு ஏற்படுகிறது. எக்ஸ்ரே, ஸ்கேன் சென்டர்கள் டாக்டர் எழுதி கொடுத்ததும் உடனே எடுப்பதில்லை. ஒரு வாரம் வரை காலதாமதம் ஆக்குகின்றனர். பணி செய்யும் பெண்களுக்கு தொந்தரவு உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. இதையும் மருத்துவமனை நிர்வாகம் தீர்க்க வேண்டும்.