/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குறவன் கண்மாய் நிறைந்தும், கழிவுநீர் கலப்பதால் பயன்பாடில்லாத தண்ணீர்

ADDED : நவ 28, 2024 04:53 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே குறவன் கண்மாய் நிறைந்தும் கழிவு நீர் அதிகம் கலப்பதால் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கு செல்லும் வழியில் குறவன் கண்மாய் உள்ளது.
ஒரு காலத்தில் குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் பயன்பட்டு வந்த கண்மாய் பராமரிப்பு இன்றி ஆகாயதாமரை, குளித்தால் உடலில் அரிப்பு ஏற்படுத்தும் புல் என கண்மாய் முழுவதும் முழுவதும் பரவி கிடக்கிறது.
ஊராட்சியின் ஒட்டுமொத்த கழிவு நீர் கண்மாயில் விடப்படுவதால் தண்ணீர் கெட்டு விட்டது.
தற்போது பெய்து வரும் தொடர் மழையில் கண்மாய் நிறைந்து உள்ளது. ஆனால், கண்மாயில் தேங்கியுள்ள தண்ணீர் எதற்கும் பயன்படுத்த முடியாமல் உள்ளது.
கண்மாயில் கழிவுநீர் சேருவதை தடுத்தும், கண்மாய் முழுவதும் வளர்ந்துள்ள விஷ புற்களை அகற்றி கண்மாயை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.