/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கொலை செய்யப்படவிருந்த ஆட்டோ டிரைவரை காப்பாற்றிய பெண் எஸ்.ஐ.,
/
கொலை செய்யப்படவிருந்த ஆட்டோ டிரைவரை காப்பாற்றிய பெண் எஸ்.ஐ.,
கொலை செய்யப்படவிருந்த ஆட்டோ டிரைவரை காப்பாற்றிய பெண் எஸ்.ஐ.,
கொலை செய்யப்படவிருந்த ஆட்டோ டிரைவரை காப்பாற்றிய பெண் எஸ்.ஐ.,
ADDED : செப் 21, 2024 12:48 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்டு கொலை செய்யப்பட இருந்த ஆட்டோ டிரைவர் கோபாலை 42, பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த எஸ்.ஐ., செல்வி மற்றும் போலீசார் காப்பாற்றினர்.
சிவகாசி அருகே விஸ்வநத்தம் கோபால் காரனேசன் ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுகிறார். சில நாட்களுக்கு முன்பு சேனையாபுரம் காலனி ஆட்டோ டிரைவர் கார்த்திக் 23, அலைபேசி மூலம் சவாரி எடுத்தார். இதனால் அவரை கோபால் கண்டித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் கார்த்திக் நண்பர் ஹரிஹரனுடன் 18, சவாரி அழைப்பது போல் கோபால் ஆட்டோவை வரவழைத்தார்.
ஆட்டோவில் ஏறிய இருவரும் வேலாயுத ரஸ்தா ரோட்டில் சென்ற போது வாளால் கோபாலை மிரட்டி ஆட்டோ பின்பகுதியில் அமர வைத்தனர். பின் கார்த்திக் ஒரு கையில் ஆட்டோவை ஓட்டியபடி ஹரிஹரனுடன் இணைந்து கோபாலை வாளால் வெட்டினார். செங்கமல நாச்சியார்புரம் அருகே ஆட்டோவில் இருந்து குதித்து கோபால் தப்பி ஓடினார்.
அவ்வழியாக பணி முடிந்து வீடு திரும்பிய எஸ்.ஐ., செல்வி அதை கவனித்து கோபாலை காப்பாற்ற முயன்றார். மற்றொரு போலீஸ்காரர் காமராஜும் எஸ்.ஐ.,யுடன் இணைந்து கொண்டார். மேலும் எஸ்.ஐ., செல்வி ஓடியபடி அலைபேசி மூலம் டி.எஸ்.பி., பாஸ்கரிடம் தெரிவித்தார். அவர் திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் நவநீதன், எஸ்.ஐ.,க்கள் சுரேந்தர், வெற்றிமுருகனிடம் தெரிவித்தார்.
போலீசாரை கண்டதும் கார்த்தி, ஹரிஹரண் தப்ப முயல எஸ்.ஐ., செல்வி கோபாலை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பினார். பிறகு கார்த்திக், ஹரிஹரனை போலீசார் கைது செய்தனர். ஆட்டோ டிரைவரை காப்பாற்றிய எஸ்.ஐ.,செல்வியை எஸ்.பி., கண்ணன், டி.எஸ்.பி., பாஸ்கர் பாராட்டினர்.
எஸ்.ஐ., செல்வி கூறுகையில், ''பணி முடிந்து வீடு திரும்பும் போது வெட்டுப்பட்ட நிலையில் காப்பாற்றுமாறு கோபால் சத்தம் போட்டார். உடனடியாக போலீஸ்காரர் காமராஜ் உதவியுடன் கோபாலை காப்பாற்றினேன்,'' என்றார்.