/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
12 பவுன் நகை திருட்டு; பெண் கைது
/
12 பவுன் நகை திருட்டு; பெண் கைது
ADDED : நவ 14, 2024 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி ; காரியாபட்டி கல்குறிச்சியை சேர்ந்தவர் நித்யா 31. நேற்று முன் தினம் காலை விவசாய பணிக்கு சென்றார். வீட்டுச் சாவியை அங்குள்ள ஜன்னலில் வைத்து விட்டு சென்றார்.
வீடு திரும்பி பார்த்த போது பீரோ திறந்திருந்தது. பீரோவில் இருந்த பன்னிரண்டே கால் பவுன் நகை திருடு போனது தெரிந்தது. மல்லாங்கிணர் போலீசார் விசாரித்தனர். அடிக்கடி இவரது வீட்டிற்கு வந்து செல்லும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் பெண்ணான காவியா திருடியது தெரிந்தது. அவரை கைது செய்து, அவரிடம் இருந்த நகைகளை மீட்டனர். இதன் மதிப்பு ரூ.7 லட்சத்து 35 ஆயிரம்.