/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பூட்டிய வீட்டில் 13 பவுன் திருட்டு
/
பூட்டிய வீட்டில் 13 பவுன் திருட்டு
ADDED : மார் 17, 2024 11:57 PM
சேத்துார் : சுந்தரராஜபுரம் மாசாணன் கோவில் தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வி 52, ஐந்து மகள்களில் 4 பேருக்கு திருமணம் முடிந்தது. 20 வருடங்களுக்கு முன் கணவர் உயிரிழந்தார்.
கடைசி மகள் லட்சுமி வழக்கம் போல் ராஜபாளையம் கோச்சிங் சென்டருக்கு படிக்க சென்றார். தாமரைச்செல்வி புல் அறுக்க வீட்டின் வெளி கதவை பூட்டி மீட்டர் பெட்டியில் சாவியை வைத்து விட்டு சென்றுள்ளார்.
மதியம் 3:00 மணிக்கு சாவியை எடுத்து முன் வாசலை திறந்தவர் உள்ளே மரக்கதவு சாவி இல்லாததால் ஆட்களை வைத்து திறந்து வீட்டிற்குள் சென்றபோது பீரோ சாவி உடைத்திருந்தது தெரிந்தது. லாக்கரில் வைத்திருந்த 13 பவுன் தங்க நகை ரூ.1 லட்சம் திருடு போயிருந்தது தெரிந்தது.
வீட்டின் சாவியை வைத்து செல்வதை நன்கு தெரிந்த நபர் தான் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

