/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புது பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வருவதை கண்காணிக்க நேரக்காப்பாளர் இல்லை
/
புது பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வருவதை கண்காணிக்க நேரக்காப்பாளர் இல்லை
புது பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வருவதை கண்காணிக்க நேரக்காப்பாளர் இல்லை
புது பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வருவதை கண்காணிக்க நேரக்காப்பாளர் இல்லை
ADDED : ஜன 01, 2026 05:55 AM
விருதுநகர்: விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் 2024 ஆக. 21 முதல்இயக்கப்பட்டு வருகிறது. பஸ்கள் வந்து செல்வதை கண்காணிக்க நேர காப்பாளர்கள் பற்றாக்குறை உள்ளது. மீண்டும் பணியமர்த்தி பஸ்கள் வருவதை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அனைத்து விருதுநகர் உள்ளூர், புறநகர் பஸ் சேவைகள் விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படுகிறது. ஆனால் திருநெல்வேலி மண்டல பஸ்கள் வந்து செல்லாததால் மீண்டும் கலெக்டர் அலுவலகமே நிறுத்தமாக செயல்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் பேர் சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் நிற்கின்றனர். தற்போது பால பணிகள் நடப்பதால் சர்வீஸ் ரோடுகளில் பஸ்சுக்காக காத்திருப்போர் கடும் காற்று மாசு மத்தியில் நிற்கின்றனர். அதிகாலை,இரவு நேரங்களில் போதிய வெளிச்சமற்ற சூழல் உள்ளதால் பெண்கள் அதிருப்தியில் உள்ளனர். விபத்து அச்சமும் உள்ளது.
புது பஸ் ஸ்டாண்டை பகல், இரவு நேரங்களில் இறக்கி ஏற்றிச் செல்வதற்கு, பணியாளர்கள், கிளை மேலாளர்கள், பஸ் ஸ்டாண்ட் பொறுப்பாளர்கள், வணிக மேலாளர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை மூலம் தகுந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்திருந்தது.பஸ் வருவதை கண்காணிக்க நேர காப்பாளர்கள், கூடுதல் பொறுப்பில்பயணசீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
தற்போது புது பஸ் ஸ்டாண்டில் யாருமே இல்லை. சில போக்குவரத்து ஊழியர்கள் மட்டுமே பகல் நேரங்களில் உள்ளனர். மூன்று ஷிப்டுகளுக்கும் நேரக்காப்பாளர்களை நியமித்து பற்றாக்குறையை போக்க வேண்டும்.
புறநகர், நகர்ப்புற பஸ்கள் மட்டுமே முறைப்படி வந்து செல்கின்றன. தொலைதுார பஸ்களில் சில விடுபடுகின்றன.திருநெல்வேலி பஸ்கள் வராதது, கோவில்பட்டி, சாத்துார் செல்வோர் சிரமப்படுகின்றனர். கலெக்டர் பாலாஜி இருந்த போது நேரக்காப்பாளர்கள்,பயணச்சீட்டு ஆய்வாளர்கள் முறையாக செயல்பட்டனர். திருநெல்வேலி பஸ்களும் வந்து சென்றன. பால பணிகள் நடப்பதால் திருநெல்வேலி பஸ்களை புது பஸ் ஸ்டாண்ட் வந்து செல்ல வழிவகை செய்ய எதிர்பார்ப்பு உள்ளது.
பஸ் ஸ்டாண்டை விரிவு படுத்தும் பணியிலும் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் தொடர்கிறது. புது பஸ் ஸ்டாண்டை பெயரளவுக்கே மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. எனவே நேரக்காப்பாளர்கள்,பயணச்சீட்டு ஆய்வாளர்களை நியமித்து பஸ்கள் வருவதை கண்காணிப்பதும், பஸ் ஸ்டாண்டிற்கு வளர்ச்சி பணிகள் செய்வதும் காலத்தின் கட்டாயமாகி உள்ளது.

