/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நாலுாரில் கால்நடை டாக்டர் இல்லை: சிரமத்தில் மக்கள்
/
நாலுாரில் கால்நடை டாக்டர் இல்லை: சிரமத்தில் மக்கள்
நாலுாரில் கால்நடை டாக்டர் இல்லை: சிரமத்தில் மக்கள்
நாலுாரில் கால்நடை டாக்டர் இல்லை: சிரமத்தில் மக்கள்
ADDED : ஏப் 13, 2025 04:24 AM
நரிக்குடி : நரிக்குடி நாலூரில் கால்நடை டாக்டர் இல்லாததால் கால்நடை வளர்ப்போர் சிரமத்தில் உள்ளனர்.
நரிக்குடி பகுதியில் ஆடுகள், மாடுகள் வளர்க்கும் தொழிலை முழு நேரமாக கொண்டுள்ளனர். பெரும்பாலான வீடுகளில் 100 முதல் 500 ஆடுகள், மாடுகள் வரை வளர்த்து வருகின்றனர், கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க நாலூரில் கால்நடை மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டது. அப்பகுதியில் உள்ள கால்நடை வளர்ப்போருக்கு பெரிதும் உதவியாக இருந்தது. இந்நிலையில் இங்கு பணியாற்றிய கால்நடை டாக்டரை 2 மாதங்களுக்கு முன் வேறு இடத்திற்கு பணி மாறுதல் செய்தனர். அதற்குப் பதிலாக வேறு டாக்டரை இதுவரை நியமிக்கவில்லை. இதனால் நாலூர் பகுதியில் கால்நடை வளர்ப்பவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் கால்நடைகளுக்கு வெட்கை, அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு, தீவனம் எடுத்துக் கொள்ள முடியாமல், இறக்க நேரிடும். இது போன்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உரிய மருந்து மாத்திரைகள் கால்நடைகளுக்கு முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக கொடுக்கப்படும். ஆனால் இங்கு டாக்டர் இல்லாததால் கால்நடை வளர்ப்போர் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.