/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருத்தங்கல் வாலிபர் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை
/
திருத்தங்கல் வாலிபர் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை
திருத்தங்கல் வாலிபர் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை
திருத்தங்கல் வாலிபர் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை
ADDED : ஜன 30, 2024 07:20 AM

சிவகாசி : சிவகாசியில் வாலிபர் கொலையில் குற்றவாளிகளை திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சிவகாசி கிழக்கு இன்ஸ்பெக்டர் ரமேஷ் ராஜா தலைமையில் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகாசி அருகே திருத்தங்கல் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் குணசேகரன்24,. இவர் ஒரு வாரத்திற்கு முன்பு டூவீலரில் சென்றபோது திருத்தங்கல் ஆலவூரணியைச் சேர்ந்த சுரேஷ் 26, வழிமறித்து பிரச்னை செய்தார். இதுகுறித்து குணசேகரனின் சகோதரர் மதனகோபால் 22, சுரேஷிடம் சென்று கேட்டதில் தகராறு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து மதனகோபால் , குணசேகரன் இருவரும் தங்களது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் இருந்தனர் . அப்போது அங்கு வந்த சுரேஷ், சுரேஷ் லிங்கம் 23, மாரி செல்வம் 25, கார்த்திக் 19, காளிமுத்து 20 ஆகியோர் மதனகோபாலை அரிவாளால் வெட்ட வந்த போது தப்பினார்.
அருகே நின்ற குணசேகரனை 5 பேரும் அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பினர். இதையடுத்து திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சிவகாசி கிழக்கு இன்ஸ்பெக்டர் ரமேஷ் ராஜா தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.