/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மின் கம்பத்தில் மோதிய டிப்பர் லாரி
/
மின் கம்பத்தில் மோதிய டிப்பர் லாரி
ADDED : ஆக 21, 2025 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி: திருச்சுழியில் இருந்து டிப்பர் லாரி அருப்புக்கோட்டையை நோக்கி வந்து கொண்டிருந்தது. குலசேகரநல்லூரை சேர்ந்த வேல்முருகன், 42, ஓட்டி சென்றார்.
மேலகண்டமங்கலம் அருகே லாரி சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து ரோடு ஓரத்தில் இருந்த உயர் அழுத்த இரும்பு மின் கம்பத்தின் மீது மோதியது. இதில் 20 அடி தூரம் மின் கம்பத்தோடு லாரியும் இழுத்துச் செல்லப்பட்டு பள்ளத்தில் கவிழ்ந்தது. லாரி இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த டிரைவர் வேல்முருகனை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மின் கம்பிகள் அறுந்ததில் அந்த பகுதியில் 3 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய பணியாளர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.