/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டிப்பர் லாரி டிரைலர் விழுந்து டிரைவர் பலி
/
டிப்பர் லாரி டிரைலர் விழுந்து டிரைவர் பலி
ADDED : ஏப் 04, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி சின்ன ராமலிங்காபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் 43. இவர் செந்தில்குமாருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் சின்ன காமன்பட்டியில் உள்ள குவாரியில் கிராவல் மண் ஏற்றி நாரணாபுரம் சிவன் நகருக்கு கொண்டு வந்தார். அங்கு மணலை கொட்டுவதற்காக லாரி டிரைலரை துாக்கிய போது செயல்படவில்லை.
எனவே முருகேசன் லாரியில் ஏறி அதனை சரி செய்ய முயல்கையில் டிரைலர் அவர் மீது விழுந்ததில் இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

