/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விடுபட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி இன்று கடைசி நாள்
/
விடுபட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி இன்று கடைசி நாள்
விடுபட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி இன்று கடைசி நாள்
விடுபட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி இன்று கடைசி நாள்
ADDED : டிச 31, 2024 04:15 AM
விருதுநகர்: மாவட்டத்தில் விடுபட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் போடுவதற்கு இன்று கடைசி நாள். மேலும் அரசு துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
தமிழகத்தில் தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது.
இதில் முதல் தவணைக்கு பின் அடுத்த தவணையை சில குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் பெற்றோர் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து விடுபட்ட குழந்தைகளுக்கு இன்று தடுப்பூசி போடும் முகாம் மாநிலம் முழுவதும் நடக்கிறது.
விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள அரசு துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கு போடுவதற்கான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.
மேலும் இன்று விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்காக பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர், என்றார்.