sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சதுரகிரி மலையில் இன்று நவராத்திரி விழா துவக்கம்

/

சதுரகிரி மலையில் இன்று நவராத்திரி விழா துவக்கம்

சதுரகிரி மலையில் இன்று நவராத்திரி விழா துவக்கம்

சதுரகிரி மலையில் இன்று நவராத்திரி விழா துவக்கம்


ADDED : செப் 26, 2011 08:31 PM

Google News

ADDED : செப் 26, 2011 08:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு:சதுரகிரி மலையில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களின் ஒன்றான நவராத்திரி திருவிழா இன்று துவங்குகிறது.சதுரகிரி மலையில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, நவராத்திரி, சிவராத்திரி திருவிழாக்கள் பிரசித்தி பெற்றவை.

நவராத்திரி திருவிழா தவிர மற்ற அனைத்தும் மலையில் எழுந்தருளிய சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி ஆகிய 'சுவாமிகளுக்கான' திருவிழாவாகும். இங்குள்ள பெண் தெய்வமான ஆனந்தவல்லியம்மனுக்காக கொண்டாடப்படும் ஒரே திருவிழா நவராத்திரி விழாவாகும்.



இதையொட்டி 10 நாட்கள் நடைபெறும் விழாவில் அம்மன் 9 நாட்களும் 9 விதமான அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார். இறுதிநாளில் அரக்கனை அம்மன் அம்பு எய்து அழிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா இன்று காப்புக்கட்டுடன் துவங்குகிறது. இதனுடன் புரட்டாசி மாத முதல் அமாவாசை விழாவும் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ஜவஹர், தக்கார் செந்தில் வேலவன், ஏழூர் சாலியர் சமுதாய நிர்வாகிகள் செய்துள்ளனர்.








      Dinamalar
      Follow us