/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விடுமுறையால் சாஸ்தா கோயில் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
விடுமுறையால் சாஸ்தா கோயில் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
விடுமுறையால் சாஸ்தா கோயில் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
விடுமுறையால் சாஸ்தா கோயில் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : டிச 29, 2025 06:37 AM

சேத்துார்: சேத்தூர் அருகே விடுமுறையை முன்னிட்டு சாஸ்தா கோவில் அருவியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் குளித்து நீராடினார்.
சேத்துார் அருகே தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவில் சாஸ்தா கோயில் உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இதன் அருகே சாஸ்தா கோயில் அருவி சுற்றுலா தளமாக அமைந்துள்ளது.
பொதுவாக வார இறுதி நாட்கள் , அரசு விடுமுறை நாட்களில் மட்டும் அருவி பகுதிகளில் அனுமதிக்கப்படும் இங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வாகனத்தில் நபருக்கு ரூ.40 நுழைவு கட்டணம் செலுத்தி அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் கொண்டு வந்து விடப் படுகிறது.
இந்நிலையில் அரையாண்டு தேர்வு முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விடுமுறையை கழிப்பதற்காக குடும்பத்தினருடன் கூட்டமாக இங்கு முகாமிட்டனர். செல்லும் வழியிலேயே ஆகாய ஸ்தலமாக விளங்கும் பழமையான நச்சாடை தவிர்தருளிய நாதர் கோயில், 33 அடி உயரம் உள்ள சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம் போன்ற இடங்கள் கூட்டம் கூட்டமாக வாகனங்களில் பார்வையிட்டு சென்றனர்.
ஏற்கனவே சமீபத்தில் பெய்த மழையால் தொடர் நீர்வரத்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

