தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/டிராக்டர் திருட்டு

டிராக்டர் திருட்டு

டிராக்டர் திருட்டு


ADDED : ஜூலை 12, 2026 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2026 01:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரியாபட்டி: மதுரை சிறுவாலையை சேர்ந்த ஹரிஹரசுதன். இவருக்கு சொந்தமான டிராக்டர், வைக்கோல் கட்டும் இயந்திரத்தை ஜூன் 25ல் காரியாபட்டி முஷ்டக்குறிச்சியில் நிறுத்தி வைத்திருந்தார். அவை மர்ம நபர்களால் திருடப்பட்டன. ஆவியூர் போலீசார் விசாரித்ததில், தூத்துக்குடி, கோவில்பட்டியைச் சேர்ந்த சங்கிலி பாண்டி 40, திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, திருடப்பட்ட டிராக்டர் வைக்கோல் கட்டும் இயந்திரத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருந்திரி தயாரிப்பு: 4 பேர் மீது வழக்கு

சேத்துார்: கிருஷ்ணாபுரத்தில் சட்டவிரோத கருந்திரி தயாரிப்பதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சேத்துார் ஊரக போலீசார் உடன் சென்று ஆய்வு செய்ததில் அனுமதி இன்றி சட்டவிரோதமாக தொழிலாளர்களை வைத்து கருந்திரி தயாரித்தது தெரிந்தது. 700 கிலோ பொட்டாசியம், கருந்திரி, நுால், இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து கட்டடத்திற்கு சீல் வைத்தனர். சிவகாசியை சேர்ந்த சங்கர் திருத்தங்கலை சேர்ந்த காமராஜ், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த குத்தாலன், இசையரசி ஆகியோர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

கஞ்சா விற்றவர்கள் கைது

சிவகாசி: திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் மாரி செல்வம் 24.இவர் பஜார் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தார். திருத்தங்கல் போலீசார் அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

*பராசக்தி காலனியைச் சேர்ந்தவர் சண்முக கனி 28. ரத்ன கிளாஸ் பஸ் ஸ்டாப் அருகே கஞ்சா விற்பனை செய்தார். கிழக்கு போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

---- சூதாடியவர்கள் கைது: ரூ. 25 ஆயிரம் பறிமுதல்

சிவகாசி: செங்கமல நாச்சியார் புரத்தைச் சேர்ந்த நாகராஜன் 36, முனியாண்டி 43, அய்யாதுரை 30, பாண்டியராஜன் 35, ஆகியோர் அதே பகுதியில் பணம் வைத்து சூதாடினர். திருத்தங்கல் போலீசார் அவர்களை கைது செய்து ரூ. 24 ஆயிரத்து 790 ஐ பறிமுதல் செய்தனர்.--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us