ADDED : நவ 14, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் ; கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடத்தப்படும் கரிசல் இலக்கிய திருவிழாவை முன்னிட்டு மக்களுக்கான மரபு கவிதை எழுதுதல் போட்டி நடக்கவுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த அனைவரும் பங்கேற்கலாம்.
இதற்கான மரபு கவிதைகளை நவ. 30க்குள் vnrkarisaltp2024@gmail.com என்ற முகவரிக்கு Bamini Unicode என்ற எழுத்து வடிவில் அனுப்ப வேண்டும். இதில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். சிறந்த 5 கவிதைகளுக்கு ஊக்கப்பரிசாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.