/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஏழாயிரம்பண்ணையில் போக்குவரத்து நெருக்கடி
/
ஏழாயிரம்பண்ணையில் போக்குவரத்து நெருக்கடி
ADDED : நவ 28, 2025 08:00 AM
சாத்துார்: ஏழாயிரம்பண்ணையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்கு வரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஏழாயிரம்பண்ணை ஊராட்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும் சுற்றியுள்ள 18 பட்டி ஊராட்சிக்கும் இந்த ஊராட்சியை தாய்க் கிராமமாக உள்ளது.
ஏழாயிரம்பண்ணையில் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள்,தீப்பெட்டி தொழிற்சாலைகள், பட்டாசு ஆலைகள், பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
நாளுக்கு நாள் வாக னங்களில் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் அவதியடைந்து வரு கின்றனர். பஸ் ஸ்டாண்டிலிருந்து சாத்துார் வரும் சாலையில் பராசக்தி மாரியம்மன் கோயில் உள்ளது.
இந்தப் பகுதி நான்கு பக்கமும் உள்ள சாலைகள் சந்திக்கும் பகுதியாக உள்ளது. இங்கிருந்து சங்கரன்கோவிலுக்கு செல்லும் ரோடு மிகவும் குறுகலானது. 10 மீட்டர் துாரம் உள்ள இந்த பகுதியை வாகனங்கள் கடக்க சுமார் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியது இல்லை.
ஏழாயிரம்பண்ணையில் இருந்து சங்கரன் கோவில், தென்காசி, கழுகு மலை செல்வதற்கு தனியாக பைபாஸ் ரோடு அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பலமுறை வலியுறுத்தி வரும் நிலையில் இன்றுவரை பைபாஸ் ரோடு அமைக்கும் பணி நடைபெறவில்லை.
சட்டசபையில் ஏழாயிரம்பண்ணையில் பைபாஸ் ரோடு அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு இன்று வரை இந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் தினமும் போக்கு வரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர்.
நாளுக்கு நாள் அதி கரித்து வரும் இப்பிரச் னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

