/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சொரியாசிஸ், வெண்புள்ளி பாதிப்புக்கு சிகிச்சை விருதுநகர் அரசு மருத்துவமனையில் சாத்தியம்

ADDED : நவ 28, 2025 08:01 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனையில் சொரியாசிஸ், வெண்புள்ளி பாதிப்புக்கு ஒளிக்கதிர் சிகிச்சை அளிக்கப்படுவதால் பாதிப்புகளை குணப்படுத்த முடியும் என அரசு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் தினசரி 20க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து சொரியாசிஸ் பாதிப்புக்கும், வெண்புள்ளி பாதிப்புக்கும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களில் பாதிப்பு அதிகமாக இருப்பவர்கள் கண்டறியப்பட்டு 60 பேருக்கு தொடர்ந்து ஒளிக்கதிர் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.
இது குறித்து தோல் சிகிச்சை நிபுணர் அமுல் பிரதாப் கூறியதாவது:
சொரியாசிஸ் பாதிப்பு எந்த வயதினருக்கும் ஏற்படும். கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு இருந்தால் அவர்களின் கருவில் உள்ள குழந்தையை பாதிக்காது. பிறருக்கு தொற்றக்கூடிய பாதிப்பு கிடையாது. ஆரம்பத்தில் கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது.
மேலும் வெண்புள்ளி பாதிப்புக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கான அறிகுறிகள் தெரிந்ததும் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். இந்த பாதிப்பில் உடலில் பரவல் அதிகமாக உள்ளவர்களுக்கு வாரத்திற்கு இருமுறை என 6 மாதங்கள் வரை ஒளிக்கதிர் சிகிச்சைகள் அளித்தால் குணப்படுத்த முடியும், என்றார்.