/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஏழாயிரம் பண்ணையில் போக்குவரத்து நெரிசல்
/
ஏழாயிரம் பண்ணையில் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூலை 24, 2025 05:27 AM
சாத்துார்,: ஏழாயிரம் பண்ணையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப்படுகின்றனர். இங்கு பைபாஸ் ரோடு அமைக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.
ஏழாயிரம் பண்ணை ஊராட்சியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தாய்க் கிராமமாக உள்ளது. மேலும் விவசாய பணிகளுக்காகவும் கல்வி கற்பதற்காகவும் தீப்பெட்டி ஆபீசில் பணிபுரிவதற்காகவும் சுற்று கிராமங்களை சேர்ந்த மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
இதனால் காலை மாலை நேரங்களில் இப்பகுதியில் கடும் போக்குவரத்தில் நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இக்கிராமத்தை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளுக்கும் வேன்கள் ,பஸ்கள் மூலம் தொழிலாளர்கள் அழைத்துச் சென்று வரப்படுகின்றனர்.
மெயின் ரோட்டில் காய்கறி கடை பஜார் ,பராசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள சாலை மிகவும் குறுகலானது. ஒரு வாகனம் சென்றால் மற்றொரு வாகனம் எதிர் திசையில் காத்திருக்க வேண்டிய நிலை நீண்ட காலமாக தொடர்கிறது.
இதனால் மெயின் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. சாலை விரிவாக்கம் செய்யப்ப படாததால்போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ஏழாயிரம் பண்ணையில் பைபாஸ் ரோடு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இங்கு பைபாஸ் ரோடு அமைக்கப்படும் என்று முதல்வர் கடந்த சட்டசபை கூட்டத்தில் அறிவித்தபோதும் இன்று வரை எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால் இப்பகுதி மக்கள் கடும் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இனியும் காலம் தாழ்த்தாது பைபாஸ் ரோடு அமைத்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.