/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அறிவிப்பில்லாத பாலப்பணிகளால் போக்குவரத்து சிக்கல்
/
அறிவிப்பில்லாத பாலப்பணிகளால் போக்குவரத்து சிக்கல்
ADDED : மே 10, 2024 11:57 PM

ராஜபாளையம் : ராஜபாளையம் தேசிய தென்காசி நெடுஞ்சாலைக்கு மாற்றாக உள்ள டி.பி மில்ஸ் ரோட்டில் முறையான அறிவிப்பின்றி நடந்து வரும் பாலப்பணிகளால் வாகன ஓட்டிகள் பாதித்து வருகின்றனர்.
ராஜபாளையம் நகர் பகுதி நடுவே செல்லும் திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை மாற்றுப்பாதையாக டி.பி மில்ஸ் ரோடு இருந்து வந்தது.
இந்நிலையில் நகராட்சி 16வது வார்டுக்கு உட்பட்ட பர்னிச்சர் கடை, வ. உ. சி., சிலை அருகே என இரண்டு இடங்களில் பாலங்கள் வலுவிழந்து காணப்பட்டன.
ஏற்கனவே பர்னிச்சர் கடை அருகே பாதிப்பை அடுத்து பாதி பகுதியில் மட்டும் போக்குவரத்து நடந்து வந்தது. தற்போது 8 மாதங்களை கடந்து இரண்டு பாலங்களையும் அகற்றிவிட்டு புதிதாக அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் பாலப்பணிகள் தொடங்கி உள்ளதை முறையாக மக்களுக்கு அறிவிக்காமலும் பணிகளுக்கான ஒப்பந்ததாரர் பெயர், திட்ட மதிப்பீடு என தகவல் பலகை அமைக்கப்படவில்லை.
மாற்று ஏற்பாடாக சஞ்சீவநாதபுரம் தெரு, விவேகானந்தர் தெரு பகுதியில் ஏற்கனவே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும்கட்டடப் பணிகள் என மண் ஜல்லிகளை கொட்டி வருவதையும் தடுக்காததுடன் மாற்றுப்பாதை குறித்து ஏற்பாடு செய்யப்படவில்லை.
இதனால் காலை, மதியம், இரவு நேரங்களில் மலையடிப்பட்டிக்கான போக்குவரத்தில் மிகுந்த நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே நெடுஞ்சாலையில் எதிரெதிரே வாகனங்களின் சிக்கலை கருதி முறையான பாதுகாப்பு நடவடிக்கையை நகராட்சி, போக்குவரத்து போலீஸ் நிர்வாகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.